மணிப்பூர் கலவரத்தில் பலியான 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கு இடையே கடந்த மே 3ம் தேதி கலவரம் வெடித்தது. இதில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அங்கு தற்போது இயல்பு நிலை திரும்பி வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இந்த கலவரத்தில் பலியானவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள், “மணிப்பூர் கலவரத்தில் பலியான குக்கி இனத்தை சேர்ந்த 60 பேரின் உடல்கள் இம்பால் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் மெய்டீஸ் சமூகத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் கராசந்த்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 64 உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன” என்று தெரிவித்தனர்.

Related posts

வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்..!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!!

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு