மணிப்பூர் கொடூரம் குறித்து கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகாரை கண்டுகொள்ளாத தேசிய மகளிர் ஆணையம்

இம்பால் : மணிப்பூர் கொடூரம் குறித்து கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகாரை தேசிய மகளிர் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பற்றி ஜூன் 12ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகவும், எந்த பதிலும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.2 பெண்கள் மற்றும் வெளிநாட்டில் இயங்கும் பழங்குடியின அமைப்பு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தேசிய மகளிர் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது வீடியோ வைரலானதால் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. மேலும் மணிப்பூர் வீடியோ காட்சியை ட்விட்டரில் இருந்து நீக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஹத்ராஸ் நெரிசல் வழக்கில் 6 பேர் கைது பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

புதிய குற்றவியல் திருத்த சட்டத்தில் இந்தி திணிப்பு; அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

திருவான்மியூர் பாம்பன் சாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு