இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர்: 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

இம்பால்: மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருவதால் 11 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பழங்குடியல்லாத மெய்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து தருவதற்கு நாகா, குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக இருசமூகத்தினரும் நடத்திய பேரணிகளில் வன்முறை வெடித்தது. 8 மலை மாவட்டங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வன்முறை பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் செல்போன், இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் வன்முறையை தடுக்கும் விதமாக பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க மாநில, ஒன்றிய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர், தெங்னவுபால், கங்க்போபி, பிஷ்னுபூர், ஜிரிபாம் உள்ளிட்ட பகுதிகளில் எந்த வன்முறை சம்பவங்களும் இன்றி அமைதியான சூழல் நிலவுகிறது. இங்கிருந்து வௌியேற்றப்பட்ட மக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதையடுத்து 11 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு