மங்கலம்பேட்டை அருகே ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்-மாணவர்கள் மறியல்

மங்கலம்பேட்டை : கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாகவும், ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நேற்று விருத்தாசலம்-மங்கலம்பேட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து, மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

Related posts

சென்னையில் ரூ.50 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினை வெளியீடு: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்

பாகிஸ்தானில் வெப்ப அலை: 500க்கும் மேற்பட்டோர் பலி