மண்டபம் பேரூராட்சியுடன் வேதாளை ஊராட்சியை இணைக்க 14 கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

*கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு

மண்டபம் : பொருளாதாரத்தில் பின்தங்கிய வேதாளை ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மண்டபம் அருகேயுள்ள வேதாளை ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியுடன் சேர்க்க போவதாக தகவல் அப்பகுதி பொதுமக்களுக்கு கிடைத்தது. அதன்பேரில் ஊராட்சி உயர் அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு வேதாளை ஊராட்சி மன்றம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சந்தோஷம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இத்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது அல்லாபிச்சை தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட குஞ்சார் வலசை, நடுமனைக்காடு, இடையர்வலசை, நாடார் குடியிருப்பு, வலையர்வாடி, கூட்டச்சாலை, சமத்துவபுரம், வேதாளை, ஆசாரி தெரு, அருப்புக்காடு, தென்கடற்கரை சிங்கிவலை குச்சு, வேலவன் குடியிருப்பு மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய 14 மீனவ கிராமங்களை சேர்ந்த கிராமத்தலைவர்கள் அர்சுணன், ராமமூர்த்தி, முருகேசன், ராமசாமி, கோபாலகிருஷ்ணன், பேச்சிமுத்து, சதாசிவம், வடிவேல், ஜமாத் தலைவர்கள் முஜிபுர் ரஹ்மான், லுத்துபுல்லாஹ், அபுதாஹீர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மீனவர்கள் வசித்து வரும் வேதாளை ஊராட்யில் 14 கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வேதாளை ஊராட்சியை எக்காரணம் கொண்டும் மண்டபம் பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது. தற்போது 2ம் நிலை ஊராட்சியாக உள்ள வேதாளை ஊராட்சியை முதல் நிலை ஊராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் மண்டபம் பேரூராட்சியுடன் வேதாளை ஊராட்சியை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என கூட்டுத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் உரியமுறையில் முறையீடுவது எனவும் முடிவு செய்துள்ளனர்.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!

பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்: இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்