அண்ணாசதுக்கம் பகுதியில் பெண்ணை அவதூறாக பேசி தாக்கிய நபர் கைது!


சென்னை: அண்ணாசதுக்கம் பகுதியில் பெண்ணை அவதூறாக பேசி தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி, மாட்டங்குப்பம், பழனியம்மன் கோயில் 3வது தெரு, எண். 27 என்ற முகவரியில் கௌரி, 39, க/பெ.ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கௌரி தனது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் துணிகளை காயவைப்பது வழக்கம். துணிகளை காயவைப்பது தொடர்பாக கௌரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிராசந்த் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கௌரி நேற்று (21.01.2024) மதியம் 3.00 மணியளவில் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த பிரசாந்த் மற்றும் அவரது தந்தை இருவரும் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கையால் தாக்கியுள்ளனர். இது குறித்து கௌரி D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பிரசாந்த், 32, த/பெ.பார்த்திபன், எண்.13.1, எல்லையம்மன் கோயில் தெரு, மாட்டாங்குப்பம், திருவல்லிக்கேணி, சென்னை என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் D-6 அண்ணாசதுக்கம் காவல்நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 11 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள பிரசாந்தின் தந்தை பாரத்திபன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்பட்ட பிரசாந்த் நேற்று (21.01.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்