மணப்பாறை கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 650 காளைகள் அதிரடி பாய்ச்சல்

மணப்பாறை: மணப்பாறை கலிங்கப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள் சீறி பாய்ந்தன. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று நடந்தது. இதற்காக திருச்சி, திண்டுக்கல், மதுரை, கரூர், புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 650 காளைகள் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை எம்எல்ஏ பழனியாண்டி, ரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் நின்று விளையாடியது.

காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள், பீரோ, கட்டில், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 175க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு களத்தில் தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்ைட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!