மணப்பாறை அருகே பண்ணப்பட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை

திருச்சி: மணப்பாறை அருகே பண்ணப்பட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மணப்பாறை அருகே புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கல்லூரி கட்டுவதற்கு முன் மண் பரிசோதனை செய்யப்படவில்லை, கல்லூரி கட்டுவதற்கான திட்ட அனுமதியும் பெறப்படவில்லை மனுதாக்கல் செய்யப்பட்டது.

கல்லூரி அமையும் இடத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, மாணவர்கள் பயனடையும் வகையில் கல்லூரி அமைக்க முடிவெடுத்து ரூ.15 கோடியில் 2 மாடிகள் கட்டுப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கல்லூரியில் இருந்து 30 மீட்டர் தொலைவில்தான் உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது, எனவே மாணவர்களுக்கு பாதிப்பில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசின் உரிய விதிமுறைகளை பின்பற்றிதான் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. வழக்கில் பொதுநலம் இல்லை என்று கூறிய நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related posts

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்