மணலி புதுநகரில் உள்ள பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும்: கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும், என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான கிராம சபை கூட்டம், மணலி புதுநகரில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர் நந்தினி சண்முகம் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், மின்வாரிய உதவி பொறியாளர் லிங்கேசன், குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், மணலி புதுநகர் குடியிருப்பு பகுதியில் இருந்து ஜோதி நகர் மேம்பாலத்திற்குச் செல்ல பாதை அமைத்து தர வேண்டும், மணலி புதுநகர் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும், வீடுகள் மற்றும் மயானம் அமைந்துள்ள இடங்களில் மேலே செல்லக்கூடிய உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு கவுன்சிலர் நந்தினி சண்முகம் பதிலளித்து பேசுகையில், ‘வார்டு மேம்பாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி இருப்பதோடு, தொடர்ந்து பல திட்டப் பணிகளைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்,’ என்றார்.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்