மணலி எம்எப்எல் சந்திப்பு பகுதியில் அமோனியா வாயு கசிவு: பொதுமக்களுக்கு மூச்சு திணறல்

திருவொற்றியூர்: மணலி பகுதியில் ஏராளமான ஒன்றிய அரசு நிறுவனமான எம்.எப்.எல். உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு அமோனியாவை பயன்படுத்தி உரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.எப்.எல் சந்திப்பு பகுதியில் நேற்று அமோனியா வாயு துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியில் வாகனத்தில் சென்றவர்கள், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள், மின் நிலைய ஊழியர்கள் ஆகியோருக்கு லேசான மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. காலை 11 மணி வரை சுமார் 2 மணி நேரம் வாயு நெடி இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அமோனியா வாயு துர்நாற்றம் அடிக்கடி வருவதால் மிகவும் சிரம்ப்படுகிறோம். எம்எப்எல் நிறுவனத்திலிருந்து அமோனியா வாயு கசிந்திருக்கலாம். மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இங்குள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்றனர்.

Related posts

பழையகோட்டை கிராமத்தில் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடம் திறப்பு

வையம்பட்டி வட்டத்தில் இலவச மின் இணைப்பு: துணை இயக்குநர் ஆய்வு