நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பூந்தமல்லி: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயது பெண், கடந்த 8ம் தேதி வில்லிவாக்கம், மண்ணடி பார்கத் தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், வில்லிவாக்கம், தாந்தோணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குணசேகர் (42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்