புனேவில் செல்போன் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்த நபர் கொலை: 4 பேர் கைதான நிலையில் போலீஸ் விசாரணை

மகாராஷ்டிரா: புனேவில் செல்போன் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்த நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் குல்கர்னி. இவர் நிதி நிறுவன ஏஜெண்ட்டாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு சாலையில் நடந்து சென்று உள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்கள் அவரை வழிமறித்து மொமைல் ஹாட்ஸ்பாட்டை பகிர வலிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஹாட்ஸ்பாட்டை பகிரி மறுத்துள்ளார். இதனால் இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில், ஆவேசம் அடைந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திர குல்கர்னியை குத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை அடுத்து இளைஞர்கள் அங்கிருந்த தப்பிச் ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து மயூர் மோசாலே என்ற இளைஞரையும் 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம்

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு