மம்தா பேச அனுமதி மறுப்பு இதுதான் கூட்டாட்சியா, முதல்வரை நடத்தும் முறையா? எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பேச அனுமதிக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இதுதான் கூட்டுறவுக் கூட்டாட்சியா? இது தான் ஒரு முதலமைச்சரை நடத்தும் முறையா? எதிர்க்கட்சிகள் என்பவை மக்களாட்சியின் இன்றியமையாத அங்கம் என்றும், அவர்கள் குரல் ஒடுக்கப்பட வேண்டிய எதிரிகள் அல்ல என்றும் ஒன்றிய பாஜ அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு திறந்த மனதுடனான பேச்சுவார்த்தையும், அனைத்துத் தரப்புக் குரல்களுக்கும் மரியாதையும் அவசியமானவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு