பிரசாரத்துக்கு சென்ற போது ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் அமரும் போது, கால் இடறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள துர்காபூரில் இருந்து குல்டியில் நடக்கும் பேரணிக்கு செல்ல ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டரில் ஏறிய மம்தா தனது இருக்கையில் அமர முயன்ற போது திடீரென கால் தவறி விழுந்தார்.

அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அவரை தூக்கி விட்டார். இதில் மம்தாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. திட்டமிட்டபடி அவர் குல்டிக்கு சென்று, திரிணாமுல் காங்கிரசின் அசன்சோல் தொகுதி வேட்பாளர் சத்ருகன் சின்காவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது