கதவுகள் திறந்தே உள்ளன; மம்தா எங்க கூட தான் இருக்காங்க: காங். பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அழைப்பு

குவாலியர், மார்ச் 4: திரிணாமுல் காங்கிரசுக்காக இந்தியா கூட்டணியின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன என் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீட்டுக்கு அனுப்ப திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியின் எண்ணிக்கை தற்போது 26ஆக குறநை்துள்ளது.

42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்தியபிரதேசம் குவாலியரில் நேற்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, “மேற்குவங்கத்தில் 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி ஒருதலைபட்சமாக அறிவித்துள்ளார். அது அவருடைய முன்னுரிமை, நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக நாங்கள் நினைக்கிறோம்.
தனித்துப் போட்டியிடுவதாக சொன்னாலும் இந்தியா கூட்டணியில் நீடிப்பதாக மம்தா கூறியுள்ளார். இதனால் அவர் பாஜவை தோற்கடிப்பதில் உறுதியாக இருப்பது தெரிகிறது. திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இந்தியா கூட்டணியில் அவர்களுக்கான கதவுகள் இன்னமும் திறந்தே இருக்கின்றன” என்று இவ்வாறு கூறினார்.

Related posts

எடப்பாடியை துரோகி என பேசியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

அதிமுக தலைமைக்கு தகுதியற்றவர் கிளைச்செயலாளர் போல செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டியில் நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது