மாமண்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும்: மாணவர்கள், கிராம மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: மாமண்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என மாணவர்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே மாமண்டூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாமண்டூர், நாவல்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் 6 முதல் 10ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்த, பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் காட்டுபன்றி, பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள், வனப்பகுதியில் இருந்து பள்ளி வளாகத்திற்கு வர வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகள் வருவதால் மாணவர்கள் அச்சதுடன் கல்வி பயின்று வருகின்றனர்.

எனவே, பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என மாணவர்களும், கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மாமண்டூர் அரசு உயர்நிைலப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிைய சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்ைக எடுக்கவில்ைல. மேலும், இப்பள்ளி சுற்றிலும் வனப்பகுதி என்பதால் காட்டுபன்றி, பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சுகள் பள்ளி வளாகத்திற்குள் வருவதால், பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை