மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மதில் சுவர் கட்டும் பணி தொடக்கம்: பக்தர்கள் பாராட்டு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு மதில் சுவர் கட்டும் பணி தொடங்கி உள்ளது. தலசயன பெருமாள் கோயில் மாமல்லபுரத்தின் மைய பகுதியான பஸ் நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ளது. இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், இக்கோயிலின் மதில் சுவரின் உயரம் குறுகியதாக இருப்பதாலும், சில இடங்களில் திறந்த வெளியாக இருப்பதாலும், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உள்ளே அத்து மீறி வந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பது, புகைப்பிடிப்பது, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவது, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களில் பாட்டில்கள் குத்தி காயம் ஏற்படுவது, சிறுநீர் மற்றும் மலம் கழித்த இடங்களில் கால் வைத்து நடப்பதால் முகம் சுளித்து செல்கின்றனர். இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் தற்போது உபயதாரர் மூலம் பழைய மதில் சுவரை அகற்றி, ரூ.22.80 லட்சம் மதிப்பில் கருங்கல்லில் புதிதாக மதில் சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பக்தர்கள் நிமத்தியாக வந்து செல்லும் வகையிலும் மதில் சுவர் கட்டும் பணியை தொடங்கி உள்ள உபயதாரருக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி