மாமல்லபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட பேவர் பிளாக் அமைக்கும் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர் செய்து, கடந்த 15 நாட்களாக பேவர் பிளாக் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணியை தொடங்கி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் பேரூராட்சி ராஜீவ் காந்தி தெருவில் இருந்து பிரிந்து செல்லும் முதல் மற்றும் 2வது குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் அகலம் குறைவாக இருந்ததோடு, குறைந்த ஆழமே இருந்ததால் மழைக் காலங்களில் கால்வாயில் இருந்து கழிவு நீருடன் மழைநீர் கலந்து வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசியது.

இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் மேற்கண்ட தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்து, அங்குள்ள வீடுகளின் கழிவு நீர் பைப் லைனை பாதாள சாக்கடையில் இணைத்து, பேவர் பிளாக் கல் பதிப்பதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கால்வாயின் மூடிகள் அகற்றப்பட்டன. பின்னர், இதுவரை எந்த பணிகளும் நடைபெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கால்வாயின் அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்