மாமல்லபுரத்தில் முதியோர் இல்லத்தினை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பொதுப்பணி துறை சாலையில், பொதுப்பணி துறை அலுவலகம் அருகில் சமூக நலத்துறையின் கீழ் வெண்பா என்ற முதியோர் இல்லம் இயங்கி வருகிறது.
இங்கு, ஆண் – பெண் என 10க்கும் மேற்பட்ட முதியோர் உள்ளனர்.

இந்நிலையில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வெண்பா முதியோர் இல்லத்தில் கழிப்பறை வசதி, இருப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? 3 வேளை உணவு முறையாக வழங்கப்படுகிறதா? போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? சமையலறை பாதுகாப்பாக பராமரிக்கப் படுகிறதா? என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு, முதியோருக்கு பிஸ்கட், துண்டு மற்றும் போர்வைகள் வழங்கினார்.

ஆய்வின்போது, செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்