கேரள போலீசுக்கு நாய்க்குட்டிகள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு: உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள போலீசுக்கு நாய்க் குட்டிகளை வாங்கியது மற்றும் அவற்றுக்கு உணவு மற்றும் பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக ஆயுதப்படை உதவி கமாண்டண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரில் மாநில போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு போலீஸ் பயிற்சிப் பள்ளியும், துப்பறியும் நாய்களுக்கான பயிற்சிப் பள்ளியும் உள்ளது. இந்த அகாடமியில் 125 நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதி உள்ளது. கேரள ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் சுரேஷ் என்பவர் தான் போலீஸ் நாய் பயிற்சி பள்ளியின் சிறப்பு அதிகாரியாக உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லி, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த பயிற்சிப் பள்ளிக்கு நாய்க் குட்டிகள் வாங்கப்பட்டன. இவற்றுக்கு கடந்த சில மாதங்களாக இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நாய்க் குட்டிகள் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் நாய்களுக்கான உணவு மற்றும் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் புகார்கள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. நாய் பயிற்சிப் பள்ளியின் சிறப்பு அதிகாரியான சுரேஷ் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி கமாண்டன்ட் சுரேஷை சஸ்பெண்ட் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலி

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த மக்கள்: புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்ச்சியின் போது உயிரிழ்நத மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்