நீட் தேர்வில் முறைகேடு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பொள்ளாச்சி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் தனி வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பது அரசின் முக்கிய நோக்கமாகும். இந்த, ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் 720க்கு 720 பெற்றுள்ளனர். அதிலும், ஒரே வரிசையில் அமர்ந்தவர்களே அந்த மதிப்பெண் எடுத்துள்ளதால் முறைகேடு எழுந்துள்ளதாக கருதுகிறோம். மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், இது சம்பந்தமாக, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்