மலேசியாவில் கட்டுமான தொழிலாளர் வெல்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

சென்னை: மலேசியாவில் கட்டுமான தொழிலாளர், வெல்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் வெளியிட்ட அறிக்கை: மலேசியாவில் பணிபுரிய கட்டுமான தொழிலாளர், கட்டுமான உதவியாளர் மற்றும் வெல்டர் ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. மலேசியாவில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள, பணி அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதிற்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர், கட்டுமான உதவியாளர் மற்றும் வெல்டர் தேவைப்படுகிறார்கள்.

கட்டுமான தொழிலாளர் பணிக்கு ரூ.50,000 ஊதியமாகவும் கட்டுமான உதவியாளருக்கு ரூ.28,000 ஊதியமாக வழங்கப்படும் மற்றும் வெல்டர் (வெல்டர் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்) மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400 மட்டும் செலுத்தினால் போதும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்