மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை

எர்ணாகுளம்: மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ், பாலியல் வழக்கில் கைசெய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். 2 மலையாள நடிகைகள் அளித்த புகாரின்பேரில் முகேஷ் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது ஒரு பெண்ணிடம் முகேஷ் தவறாக நடந்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு மலையாள நடிகர் முகேஷை கைது செய்தது. கொல்லம் தொகுதியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முகேஷ் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றிருந்தார். இதன் காரணமாக முகேஷ் கைது செய்யப்பட்டவுடன் விடுவிக்கப்பட்டார்.

ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ முதன்முறையாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ.பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அவரை கைது செய்த நிலையில் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை