மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மும்பையில் மலபார் நேஷனல் ஹப்: தேவேந்திர பட்நவிஸ் திறந்து வைத்தார்

சென்னை: மும்பையில் உள்ள அந்தேரி கிழக்கில் உள்ள மகாராஷ்டிரா இன்டஸ்ட்ரியல் டெவெலப்மெண்ட் காம்ப்ளக்ஸில், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மலபார் நேஷனல் ஹப் தொடங்கப்பட்டுள்ளது. மலபார் குழுமத்தின் தலைவர் அகமது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் லோக்மத் மீடியாவின் தலைவருமான விஜய் தர்தா, மலபார் குழுமத்தின் துணைத்தலைவர், அப்துல் சலாம், மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ், இந்தியா ஆபரேஷன்ஸ், நிர்வாக இயக்குநரான ஆஷர் ஓ, குழும நிர்வாக இயக்குநர்களான கிரி நிஷாத், வீரன்குட்டி, மாயின்குட்டி, அப்துல் மஜீத், கிரி பைசல், அப்துல்லா, மேற்கு மண்டலத் தலைவர் பன்சீம் அஹம்மது ஆகியோர் முன்னிலையில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் இந்த அதிநவீன மையத்தை திறந்து வைத்தார்.

50,000 சதுர அடியில் அமைந்துள்ள, M-NH-ன்கீழ் சில்லறை வர்த்தகம், கொள்முதல் மற்றும் சப்ளை செயின், இ-வர்ததகம், டிஜிட்டல் கோல்டு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆம்னிசேனல், ஆப்பரேஷன்ஸ், கார்ப்பரேட் கிப்டிங் மற்றும் B2B பிரிவுகள், மனித வளம் மற்றும் சட்டப் பிரிவுகள் போன்ற மலபார் கோல்டு & டைமண்டசின் பல தொழில்கள் ஒரு தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். இந்தியாவின் நிதித் தலைநகரமாகவும், உலகளாவிய நகை மற்றும் வைர வர்த்தக மையமாகவும் விளங்கும் மும்பையில் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ், அதன் யுத்திசார் நன்மைகளைப் பயன்படுத்துவதற்காக, நகரத்தில் அதன் தேசிய நடவடிக்கைகளுக்கான தளத்தை அமைத்துள்ளது.
இதேபோல், எதிர்கால வணிக 2024 நிதியாண்டுக்குள் இந்தியாவில் 32 ஸ்டோர்களையும் பிற நாடுகளில் 12 ஸ்டோர்களையும் திறக்க இருக்கிறது. 11 நாடுகளில் 330-க்கும் மேற்பட்ட அவுட்லெட்களை கொண்டுள்ள உலகளாவிய அளவில் 6-வது மிகப்பெரிய ஆபரண வர்த்தகரான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 2024ம் நிதியாண்டுக்குள் ரூ.1,000 கோடி முதலீடு செய்து 4,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு