மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டலகால பூஜைகள் தொடங்கின. வழக்கம்போலவே இந்த வருடமும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பல நாட்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு போதிய வசதிகள் செய்யப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இத்துடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடைந்தது.
மகரவிளக்கு பூஜைகளுக்காக நாளை (30ம் தேதி) மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. 20ம் தேதி காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த மண்டல காலத்தில் 33.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். கோயில் மொத்த வருமானம் ரூ.241.71 கோடி.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு