பவானி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் தொடர்களில் பராமரிப்பு பணிகள்: மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

பவானி: பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும், 22 கிலோ வாட் மின் தொடர்களில் காலநிலை பராமரிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. மின்கம்பம் மற்றும் கம்பிகளை தொட்டபடி செல்லும் மரங்கள், மரக் கிளைகளால் பலத்த காற்று, மழை பெய்யும்போது கம்பிகளில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால், நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகளை தொட்டபடி செல்லும் மரக்கிளைகள் இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. தேவைப்படும் இடங்களில் ராட்சத இயந்திரங்கள் உதவி கொண்டு மரக்கிளைகள் வெட்டப்பட்டது. பவானி நகரம், குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகர், வர்ணபுரம், ஊராட்சிக்கோட்டை, ஆண்டிகுளம், ஜீவா நகர், கூடுதுறை, சொக்கரம்மன் நகர் ஆகிய பகுதிகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்