மெடிசேஃப் பில் & மெட் ரிமைண்டர்!

அவசர வாழ்க்கை, சாப்பிடக்கூட நேரமில்லாமல் வேலைப்பளு, இதில் குடும்பப் பொறுப்புகள், என இருப்பதாலேயே இன்று நல்ல உணவுகள் தேடி சாப்பிட வேண்டிய நாம் நல்ல மருத்துவமனை தேடி ஓடத் துவங்கிவிட்டோம். சரி எடுத்துக்கொள்ளும் மருந்துகளிலாவது அக்கறைக் காட்டுகிறோமா எனில் அதிலும் மறதி. அதற்குதான் உதவுகிறது மெடிசேஃப் பில் & மெட் ரிமைண்டர் (Medisafe Pill & Med Reminder). குறிப்பாக தைராய்டு, நீரிழிவு , இதயநோய், புற்றுநோய், இரத்த அழுத்த நோய்கள், கொழுப்பு உள்ளிட்டவற்றிற்கு நீண்ட நாட்கள் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கும். அப்படியான நிலையில்தான் மறதி உண்டாகும். மேலும் இந்த நோய்களுக்கு மருந்துகள் தவறினால் ஆபத்து. என்கிற நிலையில் தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என நமக்கு ஞாபகப்படுத்தும் வேலையைச் செய்கிறது இந்தச் செயலி. சரியான நேரத்தில் மருந்துகள், மருத்துவப் பரிசோதனை நாட்களை நினைவுகூர்தல், மேலும் எந்தெந்த குறிப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றையும் நாம் பதிவு செய்து வைத்துவிட்டால் சம்பளமில்லா செவிலியர் போல் இந்தச் செயலி நம்மைப் பார்த்துக்கொள்ளும்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்