மகேந்திரகிரி விண்வெளி மையத்தில் 100 அப்ரன்டிஸ்கள்

பயிற்சி விவரம்:

1. Graduate Apprentices: 41 இடங்கள். (Mechanical-10, Electronics-10, Electrical-5, Civil-5, Instrumentation-3, Chemical-3, Computer Science-5). தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் படிப்பில் 60% தேர்ச்சியுடன் பி.இ., அல்லது பி.டெக்.,பயிற்சியின் போது மாதம் ₹9 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மகேந்திரகிரி விண்வெளி மையம், காவல்கிணறு, பணகுடி. தேதி: 10.02.2024, நேரம்: காலை 9 மணி முதல் 12.30 மணி வரை.
2. Technician Apprentices: 44 இடங்கள். (Mechanical-15, Electronics-10, Electrical-10, Civil-5, Chemical-4). தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் படிப்பில் 60% ேதர்ச்சியுடன் டிப்ளமோ.
பயிற்சியின் போது மாதம் ₹8 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: மகேந்திரகிரி விண்வெளி மையம், காவல்கிணறு, பணகுடி. தேதி: 10.02.2024, ேநரம்: மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.
3. Graduate Apprentices (Non-Engineering): 15 இடங்கள். தகுதி: 60% தேர்ச்சியுடன் பி.ஏ., பிஎஸ்சி., பி.காம்.,
பயிற்சியின் போது மாதம் ₹9 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மகேந்திரகிரி விண்வெளி மையம், காவல்கிணறு, பணகுடி. தேதி: 11.02.2024, நேரம்: காலை 9.30 மணி முதல் 12 மணி வரை.
விண்ணப்பதாரர்கள் 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் கல்வித்தகுதியை முடித்தவராக இருக்க வேண்டும். www.iprc.gov.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அசல் மற்றும் சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வின் போது கொண்டு வர வேண்டும்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கல பதக்க வாய்ப்பை தவறவிட்ட நிஷாந்த் தேவ்: காலிறுதியில் லவ்லினா வெல்வாரா?

இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதியில் வெற்றி?: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து