மகாவிஷ்ணு விவகாரத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை


சென்னை: மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த 6ம் தேதி வழங்கப்பட்டன.

இரண்டு தலைமையாசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் இருந்து வந்தனர். இந்நிலையில், இரண்டு தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிடமாறுதல் வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சண்முகசுந்தரம், அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!