மகாராஷ்டிராவில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வெடிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழ்ந்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்பூரில் உள்ள பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பேக்கிங் செய்யும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

முதற்கட்ட தகவலில் காலை முதல் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் 6 ஆண்கள் எனவும் 3 பெண்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர்களில், இருவர் வார்தாவில் வசிப்பவர்கள், ஒருவர் சந்திரபூரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அமராவதியைச் சேர்ந்தவர், மேலும் ஐந்து பேர் நாக்பூரில் வசிப்பவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி