மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு 58 பேர் படுகாயம்

மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 58 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள சபுதாரா காட் சாலையில் சௌக் பஜார்-உதானா, சூரத் பாபா சீதாராம் டிராவல்ஸ் தனியார் சொகுசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை பயணிகளை ஏற்றிக்கொண்டு சபுதாரா-மலேகான் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மாலை 6 மணியளவில் பேருந்து திருப்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புச் சுவரில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த சொகுசு பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணித்திருந்தனர். விபத்து நடந்தவுடன் மற்ற சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி உதவிக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 58 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த சப்புதாரா காவல் ஆய்வாளர் போயா, ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். இதற்கிடையில், காயமடைந்தவர்கள் ஷாம்கவன் சிஎச்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சப்புதாரா போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு