மகாளய அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குவிந்துள்ள பக்தர்கள்

ராமநாதபுரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீர்நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். தொடர்ந்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். இதனால் ராமேஸ்வரம் முழுக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி பரிகார மண்டபங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மகாளய அமாவாசையை ஒட்டி ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானி கூடுதுறையில் திரண்டனர். கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

Related posts

நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர்: இபிஎஸ் புகழாரம்

பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!

சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு: 20,000 ஆசிரியர்கள் பாதிப்பு!!