மகாதேவ் உட்பட 22 சூதாட்ட ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட ஆப்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, மகாதேவ் சூதாட்ட ஆப் உரிமையாளர்களிடம் இருந்து சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ₹508 கோடி பணம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியது.இந்நிலையில், மகாதேவ், ரெட்டியன்னாரெஸ்டோபிரோ உட்பட 22 சூதாட்ட ஆப்களுக்கு ஒன்றிய அரசு நேற்று தடை விதித்தது. இது குறித்து ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த அறிக்கையில், ‘‘மகாதேவ் ஆப் குறித்து சட்டீஸ்கர் மாநில அரசு ஒன்றரை ஆண்டாக விசாரித்தது. அந்த ஆப்புக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் சட்டீஸ்கர் மாநில அரசுக்கு இருந்தும் அதை செய்யவில்லை. அமலாக்கத்துறையிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டதன் மூலம் மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related posts

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்