மகப்பேறில் நன்மைகள் அள்ளிக் கொடுக்கும் நாவல்பழம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அவசியமாகிறது. குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கர்ப்பகாலத்தில் நாவல்பழம் எடுப்பது உங்களுக்கு எந்த மாதிரியான நன்மைகளைக் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நாவல் பழத்தின் ஊட்டச் சத்து அளவுகள்

நாவல் பழம் ஆசியாவின் பெரும் பகுதிகளில் காணப்படும் பழம். இதில் கர்ப்ப காலத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகிறது. 100 கிராம் நாவல் பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்து அளவுகள் பின்வருமாறு:

கலோரிகள் 60-70 கலோரிகள்
கார்போஹைட்ரேட்டுகள் 14-18 கிராம்.
புரதம் 0.8-1.2 கிராம்.
நார்ச்சத்துக்கள் 4-8 கிராம்
கொழுப்பு 0.1-0.2 கிராம்
வைட்டமின் சி 18-20 மி.கி.
இரும்புச்சத்து 0.7-1 மி.கி.
கால்சியம் 15-20 மி.கி.
பொட்டாசியம் 79-82 மி.கி.

நாவல்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நாவல் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் போன்றவை ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும், செல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்க்கு எதிராகத் திறம்பட செயல்படுகிறது.

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது

கர்ப்பகால நீரிழிவுநோயை தடுக்க நாவல்பழம் உதவுகிறது. நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது கர்ப்பகால நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கர்ப்பகால ஹார்மோன்களால் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். நாவல் பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களை மெதுவாக்குகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை என நாவல் பழம் சாப்பிடுவது செரிமான அசௌகரியத்தை தணிக்க உதவுகிறது. ஒட்டு மொத்த இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது

கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் வளரும் கரு இரண்டையும் பாதுகாக்க வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பது அவசியம். நாவல் பழத்தில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட உதவுகிறது. காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு உறிஞ்சுதலையும் ஊக்குவிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது

கர்ப்பகாலத்தில் வளரும் குழந்தையை ஆதரிக்க உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது நாவல்பழம் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நாவல் பழத்தில் இரும்புச் சத்து நிறைய அளவில் காணப்படுகிறது. இவை இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் இரத்தசோகை பிரச்னைகள் ஏற்படலாம். எனவே கர்ப்பகாலத்தில் போதுமான இரும்புச்சத்து இருப்பது அவசியம். இது சோர்வை குறைக்கிறது. வளரும் கருவிற்கு ஏற்ற ஆக்ஸிஜன் உற்பத்தியை கொடுக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

நாவல் பழத்தில் நிறைய கால்சியம் சத்துக்கள் காணப்படுகிறது. இது குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் தாயின் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கால்சியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.ஆஸ்டியோபோசிஸ் போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் நாவல் பழத்தை சாப்பிடுவது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.

நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள்

கர்ப்பகாலத்தில் நீரேற்றமாக இருப்பது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. நாவல்பழத்தில் அதிக நீர் உள்ளடக்கம் காணப்படுகிறது. இது நீரேற்றத்திற்கு உதவுகிறது. இதில் பொட்டாசியம், அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

– கவிதா பாலாஜிகேணஷ்

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு