மதுரவாயல் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

பூந்தமல்லி: மதுரவாயலில் நடந்த கொலை வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னை மதுரவாயலில் கடந்த 2012ம் ஆண்டு டில்லி பாபு (எ) வெங்கடேஷ் (29) என்பவர் முன்விரோதம் காரணமாக மதுரவாயலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரவாயலைச் சேர்ந்த கார்மேகம் (41) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து மதுரவாயல் போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த கார்மேகம் கொலை வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கார்மேகத்தை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து மதுரவாயல் தனிப்படை போலீசார் கார்மேகத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்பு மதுரவாயலில் நேற்று கார்மேகம் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட கார்மேகத்தை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்