மதுரையில் பயங்கரம்.. கண்டெய்னர் லாரி – கார் மோதி கோர விபத்து.: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

மதுரை : மதுரை திருமங்கலம் அருகே கண்டெய்னர் லாரியுடன் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி 4 வழிச்சாலையின் தடுப்பு சுவரில் மோதி 3 முறை உருண்டு எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் மையிட்டாண்பட்டி விலக்கு அருகே பகுதியில் நடந்த இந்த விபத்தில் காரில் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜேம்ஸ் மார்ட்டின், சாம் டேவிட் சன், கமலேஷ் ஆகிய மூவரும் லாரி ஓட்டுனரான மதுரையைச் சேர்ந்த செல்வ குமாரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளிக்குடி காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த உயிரிழந்த 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே நேற்று மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் லாரி ஒன்று வேகமாக வந்து அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!