மதுரை மீனாட்சியம்மனுக்கு செலுத்திய பட்டுச்சேலைகள் ரூ.5.45 கோடிக்கு ஏலம்: ஆர்டிஐயில் தகவல்

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய பட்டுச்சேலைகள் ரூ.5.45 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு தினமும் பட்டுச்சேலைகள், வேஷ்டிகள், துண்டு சாத்தப்படுவது வழக்கம். அவ்வாறு அம்மனுக்கு சாத்தப்படும் பட்டுச்சேலைகள், பட்டு வேட்டிகள் மற்றும் துண்டுகள் கோயில் நிர்வாகம் சார்பில் வாரம் ஒருமுறை ஏலம் விடப்படும்.

மீனாட்சியம்மன், சுவாமிக்கு சாத்தப்பட்ட பட்டுச்சேலைகள் மற்றும் வேட்டி, துண்டுகள் எத்தனை கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில், ‘கடந்த 2020 முதல் 2022ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம் கோயிலின் வங்கிக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தத்தளிப்பு

சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு

ஜூலை 13: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை