மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை சுமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

மதுரை : மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை சுமுகமாக நடத்த முடியும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பருத்திப்பட்டில் சுந்தராட்சிஅம்மன் கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடின்றி நடத்தக் கோரி பருத்திப்பட்டைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் திருவிழாவில் அனைத்து சாதியினருக்கும் சம வழிபாட்டு உரிமையை தர உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தவிதமான சாதிய பாகுபாடும் இல்லாமல் விழாவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக உறுதி அளித்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை சுமுகமாக நடத்த முடியும். அதிகாரிகள் தலையிட்டு எவ்வாறு திருவிழாவை நடத்த முடியும்,”எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய் கோட்டாட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்: ஜனநாயக கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்