மதுரை அண்ணா பேருந்து நிலையம் – கோமதிபுரம் வரை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: மதுரை அண்ணா பேருந்து நிலையம்-கோமதிபுரம் வரை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. உயர்மட்டக் குழு அமைத்து வண்டியூர் கண்மாய்க்கு பாதிப்பு ஏற்படுமா? என ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அண்ணா பேருந்து நிலையம் முதல் கோமதிபுரம் வரை ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்க தடை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆய்வுக் குழுவில் நீதிபதி தண்டபாணி, அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சேர்ந்து ஆய்வு செய்யப்படும். வண்டியூர், தென்கால் கண்மாய் பகுதிகளில் தற்போதைக்கு கட்டுமானப் பணி மேற்கொள்ளக் கூடாது என நீதிபதி தெரிவித்தார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி