மதுரை விமான நிலையம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து!

மதுரை: மதுரை விமான நிலையம் அருகே சின்னஉடைப்பு பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் திருமங்கலத்திலிருந்து சுண்ணாம்புகாரை ஏற்றி வந்த சின்னஉடைப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது கமுதையில் இருந்து மாட்டுத்தாவணி செல்வதற்காக தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது.

அப்போது லாரியை முந்துவதற்காக தனியார் பேருந்து லாரியின் வலதுபுறம் செல்ல முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் லாரி தலைகீழாக கவிந்தது. பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக காயமடைந்த 11 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் மீது விபத்திற்குள்ளான லாரி மற்றும் பேருந்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…