மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை அகற்ற உத்தரவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார வளைவை பொதுமக்களுக்கு சிரமமின்றி அகற்ற வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு அளித்துள்ளது. சாலைகள் விரிவுபடுத்தும் போது அந்த பகுதியில் உள்ள அலங்கார நுழைவாயில்களையும் அப்புறப்படுத்தினால் தானே போக்குவரத்து சீராகும். மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள நுழைவாயிலையும் அகற்றிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நுழைவாயில்களை அப்புறப்படுத்துவது பற்றி மதுரை காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்.10-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது

 

 

 

 

 

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!