மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தரிசனத்துக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in-ல் ஏப்.22 முதல் 25-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ரூ.500 கட்டணச் சீட்டை இரண்டு முறையும், ரூ.200 கட்டணச் சீட்டை மூன்று முறை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் மேற்கு சித்திரை வீதியில் உள்ள தங்கும் விடுதியில் நேரில்சென்று ஆதார், புகைப்படம் அளித்து முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தவுடன் ஏப்ரல் 27 முதல் 30ம் தேதி வரை நேரில் அனுமதிச் சீட்டை பெறலாம். வெளியூர் நபர்கள் மே 1ம் தேதி அன்று அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மே 2ம் தேதி நடைபெறுகிறது.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்