மதுரையில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த 106 பயணிகள் வெளியேற்றம்: அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக கூறி மோசடி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்வதற்காக போலி டிக்கெட்டுகளுடன் வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருந்து அயோத்தியா செல்வதற்கு இண்டிகோ விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் புக் செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் புக்கிங் ஏஜென்சியில் புக் செய்தனர்.

அதை தொடர்ந்து, இன்று காலை அவர்கள் விமானத்தில் பயணிப்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் வைத்திருந்த டிக்கெட்டை செக்கிங் பாய்ண்ட்டில் கொடுத்தபோது 100க்கும் மேற்பட்ட பயணிகள் வைத்திருந்த டிக்கெட்டுகள் முழுவதுமே போலியானது என்று ஏர்போர்ட் நிர்வாகத்தினர் தெரிவித்ததை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அவர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து கொடுத்த ஏஜென்டை கேட்டபோது நான் அதை செய்யவில்லை எனக்கு தெரிந்தவரிடம் சொல்லி இருந்தேன் அவர் தான் இந்த டிக்கெட்டை புக் செய்தார். அவரிடம் விசாரித்து உடனடியாக உங்களுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். அதனால் தற்போது 100க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் போலி டிக்கெட்டுடன் மதுரை விமான நிலையத்தில் அமர்ந்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.51,600க்கு விற்பனை..!!

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!