மதுரையில் 38வது நாய்கள் கண்காட்சி: 55 வகையை சேர்ந்த 500 நாய்கள் பங்கேற்பு

மதுரை: மதுரையில் 38வது ஆண்டாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. மதுரை தமுக்கம் மைதானத்தில் கேனைன் கிளப் சார்பில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 55 வகைகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்டன.

கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய்களும் கண்காட்சியில் பங்கேற்று மேடையில் ஒய்யார நடைபயின்றன. பல்வேறு பிரிவுகளாக நாய்களின் எடை உயரம், அவற்றின் உடல் அமைப்பு செயல்திறன் மற்றும் உரிமையாளர்களுக்கு கட்டுப்படும் விதம் ஆகியவற்றை பரிசோதித்த நடுவர்கள் தேர்வு செய்த சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மதுரை கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியை காண சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் குழந்தைகளுடன் வருகை தந்திருந்தனர். வீட்டை பாதுகாத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் நாய்களை அலங்கரித்து உரிமையாளர்கள் அழைத்து வந்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்