மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

அவனியாபுரம்: மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துகுமார் கூறியதாவது:
இன்று முதல் (அக்.1) மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் இயங்கும். துவக்க நிகழ்ச்சி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய விமான ஆணைய தலைவர் சஞ்சீவ் குமார், எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 305 பேர், விமான நிறுவன ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர், குடியுரிமை அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 29ம் தேதி முதல் குளிர்கால அட்டவணை தொடங்குவதால் அதிக அளவிலான விமான சேவைக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் அதிகரித்து தற்பொழுது இந்திய விமான நிலையங்களில் அதிக பயணிகளை கையாள்வதில் 32வது இடத்தில் உள்ள மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related posts

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி

உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு