மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தாமதமாவதை ஒப்புக்கொள்கிறோம்: அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தாமதமாவதை ஒப்புக்கொள்கிறோம் என ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் மதுரை எய்ம்ஸ் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்து வருகிறார். தாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் ஆனால் மிக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். மேலும், தொழில்நுட்ப காரணங்களால்தான் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகிறது என அவர் கூறினார்.

Related posts

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்