ஆர்ம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணை தொடங்கியது. ஆம்ஸ்ட்ராங்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யவே அனுமதி கோரப்பட்டுள்ளது என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பில் வாதம் செய்து வருகின்றனர்.

அடக்கம் செய்ய அனுமதி கோரும் இடம் குடியிருப்பு பகுதியா என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய, அருகில் வசிப்பவர்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

16 அடி சாலை அருகில் இந்த நிலம் அமைந்துள்ளது , ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. குடியிருப்பு பகுதி, குறுகலான சாலை போன்ற காரணங்களை கூறி தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது, அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தரப்பு கூறியது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி நெரிசல் நிறைந்த பகுதி என்பதற்கான வரைப்படங்களை சமர்ப்பித்து அரசு தரப்பில் வாதம் செய்து வந்தது.

மயானம் எனறு அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. மணிமண்டபம் கட்ட பெரிய இடம் வேண்டும், 2,400 சதுர அடி அரசு வழங்குகிறதே என்று நீதிபதி கூறியுள்ளார். உங்கள் தரப்பை கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் எடுக்கும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் ஏதேனும் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள். பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படக் கூடாது.இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள், உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு 10.30 மணிக்குள் சொல்லுங்கள், உத்தரவு பிறப்பிக்கிறேன். வழக்கு விசாரணை 10.30 மணிக்கு தள்ளிவைத்துள்ளனர். 12 மணிக்கு பதிலளிப்பதாக மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை