நீதிமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தனி சம்பளத்தை மீண்டும் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தனி சம்பளத்தை மீண்டும் வசூலிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையை 3 மாதங்களில் திரும்ப வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அடிப்படை ஊதியத்தில் தனி சம்பளமாக வழங்கப்பட்ட 5% ஊதியத்தை திரும்ப வசூலிப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் ராஜேந்திரன், ஜெயந்தி, அமுதா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 1988 மே மாதம் தரப்பட்ட நிலையில் 1992-ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு தந்தது தவறு என்பதால் திரும்ப வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி