நில மோசடி விவகாரத்தில் நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாகக் கூறி, நடிகையும், பா.ஜ. நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை குட்டி பத்மினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நிலத்தின் உரிமை கோரி புகார்தாரர் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் தொடர்பான இந்த பிரச்னைக்கு குற்றவியல் வண்ணம் பூச முடியாது எனக் கூறி நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்