மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புல்லரம்பாக்கத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜே.உமாமகேஸ்வரன் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரா.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, பிரியாகுமார், அக்னி ராஜேஷ், மாநகர அமைப்பாளர் துர்கா பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, ஆதிதிராவிரடர் நலக்குழு மாநில செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  அப்போது ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பேசியதாவது: இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும். தற்போது வாகனங்கள் அதிகரிப்பால் புகையை சுவாசிக்கும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே மரங்களை நட்டு இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை நட வேண்டும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் இளைஞரணி சார்பில் மரக்கன்றுகளை நட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், செ.பிரேம் ஆனந்த், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், சி.ஜெரால்டு, எஸ்.ஜெயபாலன், எஸ்.சீனிவாசன், த.எத்திராஜ், ஜி.விமல்வர்ஷன், தியாகராஜன், கிரண்குமார், விஜயசாரதி, ராஜ்மோகன், சுமன், ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு